அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுமா? நடிகை விந்தியா பரபரப்பு பேட்டி!
அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவு படுத்தி பேசியதை கண்டித்து அதிமுக மகளிரணி சார்பில் கோவை செஞ்சுலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், நடிகையமான விந்தியா கலந்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய விந்தியா,
"திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதுவரை யார் அந்த சார் ? என்று தெரியவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் என்ன செய்தார். தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் போக்சோ வழக்குகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளும் அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடியவர் எஸ்.பி.வேலுமணி. தொகுதி சீட்டுக்காக அறிவாலயத்தில் ரெய்டு நடந்ததே அப்போது எங்கே போனது உங்க அவுட் ஆப் கண்ட்ரோல். தேர்தலுக்கு முன்பு எல்லாம் பெண்களுக்கு 1000 ரூபாய் என்று சொல்லிவிட்டு இப்போது சிலருக்கு மட்டும் தான் கொடுத்துள்ளார்கள்.
அண்ணா பல்கலைகழக விவகாரத்தை மறைக்க இந்தி மொழி விவாகரம் குறித்து பேசி திசை திருப்புகிறார்கள். ஸ்டாலினையும் ,மக்களையும் மதிக்காதவர் அமைச்சர் பொன்முடி. பொன்முடியை கண்டிக்க திமுகவில் ஒரு ஆள் கூட இல்லையா. பொன்முடி மீது ஏன் காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுகவின் கூட்டணியை பார்த்து திமுக பயப்படுகிறது.
எடப்பாடியாரை ஸ்டாலின் என்றும் வீழ்த்த முடியாது. அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால் சிறப்பாக செயல்படுவேன். இன்னும் அறிவிப்பு வரவில்லை. வந்தால் எனது செயல் பேச்சாக இருக்காது செயலாக இருக்கும். சசிகலா, ஒபிஎஸ் இல்லாமலே நாங்கள் பலமாக இருக்கிறோம்.
இபிஎஸ் அழைத்த விருந்தில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு, எங்களுக்குள் எந்த மனகசப்புமில்லை. எங்கள் கட்சியில் எல்லோரும் அண்ணன், தம்பிகளாக செயல்பட்டு கொண்டுருக்கிறார்கள். நடிகர் விஜய் கலத்துக்கு வரவேண்டும் இது சினிமா வேறு, அரசியல் வேறு" என்று தெரிவித்துள்ளார்.