Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தனியார் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் - விரட்டிய வனத்துறையினர்!

10:58 AM Sep 04, 2024 IST | Web Editor
Advertisement

தனியார் கல்லூரியில் குட்டிகளுடன் புகுந்த காட்டு யானைகளை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வனப்பகுதிக்குள் வனத் துறையினர் விரட்டினர்.

Advertisement

கோவை ஆலந்துறை அடுத்த நல்லூர்வயல், சடையாண்டி கோயில் அருகே தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியின் விடுதி அருகே நேற்று 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளது. இதனையடுத்து கல்வி நிர்வாகத்தினர் இதுகுறித்து மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து, அங்கு வந்த வனத்துறையினர் 2 குழுக்களாக செயல்பட்டு காட்டு யானைகளை கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியே விரட்டினர். பின்னர் குடியிருப்புப் பகுதிக்குள் காட்டு யானைகள் செல்லாமல் இருக்க, அதனை கண்காணித்து அடர்ந்த வனத்துக்குள் விரட்டினர். இருப்பினும் வனப்பகுதியில் இருந்து, மீண்டும் காட்டு யானைகள் வரக் கூடும் என்பதால் அந்த பகுதியில் வனத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
Next Article