Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோவை | “நான் தான் வருவேன்னு தெரியும்ல... அப்புறம் ஏன் கேட்ட பூட்டுற..” - யானைகள் அட்டூழியம்!

01:03 PM Jan 06, 2025 IST | Web Editor
Advertisement

கோவையில் அசால்டாக கேட்டை உடைத்து உள்ளே சென்று வருவதை யானைகள் வழக்கமாக கொண்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்

Advertisement

கோவை, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப் பகுதியில்

யானைகள் கடந்த சில மாதங்களாக முகாமிட்டுள்ளது. உணவை தேடி தோட்டங்கள் மற்றும் ஊர்களுக்குள் புகுந்து பூட்டி இருக்கும் வீடுகளை உடைத்து சேதப்படுத்தி உணவு பொருட்களை உண்டு செல்கிறது. தோட்டங்களில் கால்நடைகளுக்கு வைத்து இருக்கும் தீவனங்களையும், உணவுகளையும் சூறையாடிச் செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் தடாகம் அருகே உள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தோட்டத்தில் பூட்டி இருந்த இரும்பு கேட்டை அசால்டாக துதிக்கையால் தள்ளி திறந்து செல்லும் யானையின் வீடியோ காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறும்போது தோட்டங்களுக்கு சோலார் மின்வேலி மற்றும் பூட்டப்பட்டு இருக்கும் இரும்பு கேட் கதவுகளை திறந்து உள்ளே செல்ல யானைகள் தற்பொழுது கற்றுக் கொண்டு உள்ளது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை என உணர்ந்த யானைகள் மின்சாரம் தாக்கும் என்று அச்சம் இல்லாமல் உள்ளே நுழைய துவங்கி உள்ளதாக, இதனால் பெரும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பாக தமிழக அரசும், வனத்துறையும் யானைகள் வராமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags :
CoimbatoreWildElephant
Advertisement
Next Article