தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பரவலாக கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் இடி மில்லுடன் கூடிய கனமழை பொழிய அதிக வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நேற்று முதல் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு உள்ளாக திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் திண்டுக்கல் கோயம்புத்தூர் திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் இடி மில்லுடன் கூடிய கனமழை பொழிய அதிக வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை திருவண்ணாமலை விழுப்புரம் அரியலூர் தஞ்சாவூர் ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி மினுடன் கூடிய மிதமான முதல் லேசான மழை பொழிய அதிக வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.