Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவதில் ஏன் தாமதம்?... வெளியான அதிர்ச்சி தகவல்!...

10:57 AM Jun 30, 2024 IST | Web Editor
Advertisement

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அருகே ரஷ்யாவிற்குச் சொந்தமான செயற்கைக்கோள் வெடித்து சிதறியுள்ளதாக பதற்றமான தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள நிலையில், அதன் அருகே செயற்கைக்கோள் வெடித்த சம்பவம் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையமானது, பூமியில் இருந்து, சுமார் 400 கி,மீ உயரத்தில், சர்வதேச விண்வெளி நிலையமானது பூமியைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த விண்வெளி நிலையத்தில், விண்வெளி வீரர்கள் தங்கி, விண்வெளி தொடர்பான பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றனர். கடந்த ஜூன் 5 ஆம் தேதி இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர்.

இந்த சூழ்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அருகே ரஷ்யாவின் செயற்கைக்கோள் வெடித்துச் சிதறியது.இதுகுறித்து நாசா தெரிவிக்கையில், கடந்த புதன் கிழமை, ரஷ்யாவின் ரிசர்ஸ் என்ற செயற்கைக்கோள் வெடித்து 100க்கும் மேற்பட்ட பாகங்களாக வெடித்துச் சிதறியது. இதையடுத்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகள் பாதுகாப்பாக, விண்கலத்திற்கு உள்ளே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  ரிசர்ஸ் செயற்கைக்கோளின் பாகங்கள் , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அருகே காணப்படுவதால், அங்கே இருக்கும் சுனிதா வில்லியம்சுக்கு சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, சுனிதா வில்லியம்ஸ் சென்ற விண்கலத்தின் பூஸ்டரில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதன் எதிரொலியாக, அவர் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் 26 ஆம் தேதி பூமிக்கு வருவார் என்ற நிலையில், இன்னும் விண்வெளி நிலையத்தில் உள்ளார்.  இந்த சூழ்நிலையில், அவரை எப்படி பூமிக்கு திருப்பிக் கொண்டு வருவது என்ற சிக்கல்கள் எழுந்துள்ளன. அவர் சென்ற ஸ்டார்லைனர் விண்கலம் சரிசெய்யப்பட்டு , அழைத்து வரப்படுவாரா இல்லை , எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் அழைத்து வரப்படுவார் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸின் பூமி திரும்பும் திட்டம் குறித்து, இதுவரை உறுதியாக தெரியவில்லை. இந்த தருணத்தில், அவர் இருக்கும் விண்வெளி நிலையத்தின் அருகே செயற்கைக்கோள் சம்பவமும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது, செயற்கைக்கோள் வெடிப்பால் பாதிப்பு இல்லை என்ற சமீபத்திய சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement
Next Article