செந்தில் பாலாஜி பதறுவது ஏன்? - அதிமுக கேள்வி..!
அதிமுக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“கருர் துயரம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம் என்று திமுக அரசு அறிவித்த பிறகு, EB அதிகாரி, மாவட்ட ஆட்சியர், சட்டம் ஒழுங்கு ADGP ஆகியோர் பிரஸ் மீட் நடத்துகின்றனர், டிஜிபி பிரஸ் மீட் நடத்துகிறார், முதல்வர் வீடியோ வெளியிடுகிறார், வருவாய்ச் செயலாளர், மருத்துவத்துறைச் செயலாளர், டிஜிபி, ஏடிஜிபி ஆகியோர் கூட்டாக பிரஸ் மீட் நடத்துகின்றனர். இப்போது செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு. இவ்வளவு பதட்டப்பட்டு என்ன சொல்ல வருகிறீர்கள்..?
எடப்பாடி பழனிசாமி அவர்கள் சொன்னதுபோல், விசாரணை ஆணையத்தை அரசுக்கு வேண்டிய திசையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறீர்களா?
"அரசியல் செய்யாதீர்" "அரசியல் செய்யாதீர்" என்று எல்லா அரசியலையும் செய்துக் கொண்டிருப்பது யார்? திமுக தானே?. உங்கள் பதட்டம் தான் உண்மையிலேயே கரூரில் நடந்தது என்ன? என்ற கேள்வியை, சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது. ஒரு விசாரணை ஆணையம் அமைத்த பிறகு, அது தொடர்பான வாதங்களையோ, காணொளிகளையோ அரசு அதிகாரிகள், அரசைச் சார்ந்தோர் பொதுவெளியில் வெளியிட்டு, ஆணையத்தின் நிர்ணயங்களை அவமதித்துள்ளீர்கள். இது நீதிமன்ற அவமதிப்புக்கு சமம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.