தமிழ்நாட்டில் நடக்கும் படுகொலைகள் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது - நடிகர் விஷால்!
எதற்காக தமிழ்நாட்டில் மட்டும் இரட்டை வரி வசூலிக்கப்படுகின்றது? என நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் நடைபெற்ற மாவட்ட தலைமை ரசிகர் மன்ற
நிர்வாகியின் இல்ல சுப நிகழ்வில் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் கலந்து கொண்டார். தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற
மக்களுடன் புகைப்படங்களும், செல்ஃபியும் எடுத்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு படங்கள் இருந்தால் அது நிச்சயம் வெற்றி அடையும். தமிழ்நாட்டில் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறித்து ஆராய வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன். காரணம் இரட்டை வரி வசூலிக்கும் ஒரே மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ”ஒரே நாடு ஒரே வரி” என நீங்கள் சொன்னபோது நான் உங்களை நம்பினேன், ஆனால் எதற்காக தமிழ்நாட்டில் மட்டும் இப்படி நடக்கிறது? ஏன் யாருமே இந்த விவரகாரம் பற்றி கவலை கொள்வதில்லை. இது திரையுலகை மிகவும் மோசமாக பாதிக்கிறது.