Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘#Kavach’ இருந்தும் ரயில் விபத்துகள் ஏற்படுவது ஏன்? கவாச் தொழில்நுட்பம் என்றால் என்ன?

12:52 PM Oct 12, 2024 IST | Web Editor
Advertisement

கவாச் தொழில்நுட்பம் என்றால் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்....

Advertisement

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து, சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (12578), நேற்றிரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதும் ஏற்படவில்லை. தொடர்ந்து சேதமடைந்த தண்டவாளங்களை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கவாச் தொழில்நுட்பம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

ரயில் விபத்துகள் ஏற்படும்போதெல்லாம் நாட்டில் கவாச் தொழில்நுட்பம் பேசுபொருளாகிறது.
‘கவாச்’ என்பது ரயில் விபத்துகளை தடுக்க இந்தியாவால் உருவாக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு அம்சமாகும். இந்த தொழில்நுட்பத்தை இந்திய ரயில்வேயின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பான RSCO உருவாக்கியது. இது ஒரு தானியங்கி பாதுகாப்பு அம்சமாகும்.

ரயிலின் வேகத்தை உடனடியாக கட்டுப்படுத்துவதை, இது முதல் வேலையாக கொண்டுள்ளது. அதாவது ஓட்டுநர்களுக்கு விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் விதமாக இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ரயில்கள் ஒரே பாதையில் வரும் போது சிக்னல் பாஸிங் அட் டேஞ்சர் (SPAD) எனும் சமிக்ஞையை ஏற்படுத்தி ரயில் ஓட்டுநர்களை எச்சரிக்கும். இதன் மூலம் ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு, விபத்தை தவிர்க்கலாம்.

இருப்பினும் ஓட்டுநர் கவனக்குறைவாக, சரியான நேரத்தில் பிரேக் போடத் தவறினால், இந்த தொழில்நுட்பமே பிரேக் அப்ளை செய்து, வேகத்தை கட்டுப்படுத்தும். இது விபத்திற்கான சாத்தியத்தை குறைக்கும். பனி மூட்டம் அதிகமாக இருக்கும் சூழலில் எதிரே ரயில் வந்தால் கூட முன்கூட்டியே இது எச்சரிக்கும். அதுமட்டுமல்லாமல், அவசரகால சூழ்நிலைகளில் ரயிலைக் கட்டுப்படுத்த SOS அம்சமும் இதில் இருக்கிறது.

இப்படி ஒரு பாதுகாப்பு அம்சம் இந்தியாவில் இருந்தும், ரயில் விபத்துகள் தொடர்ந்தே வருகின்றன. இதற்கு காரணம் என்ன? பாதுகாப்பு அம்சம் உருவாக்கப்பட்டாலும், பல மார்க்கங்களிலும், ரயில்களிலும் அவை செயல்படுத்தப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

நேற்று விபத்து நடந்த கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இந்த பாதுகாப்பு அம்சம் செயல்பாட்டில் இருந்ததா? பயணிகள் ரயிலில் இந்த தொழில்நுட்பம் இருந்ததா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அல்லது ரயிலில் அந்த தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருந்தும் செயல்படவில்லையா? என கேள்வி எழுந்துள்ளது.

பயணிகள் ரயில் மெயின் லைனில் செல்லாமல், லூப் லைனில் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல் தெரிவித்துள்ளார். அப்படி செல்கையில் எந்த சமிக்ஞையும் தொழில்நுட்பத்தால் கொடுக்கபடவில்லையா? என கேள்வி எழுந்துள்ளது. அதற்கு கவாச் தொழில்நுட்பத்திற்கும், கவரப்பேட்டை ரயில் விபத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி தெரிவித்துள்ளார். இதனால் இது மனிதர்களின் சதிவேலையா என ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
IndiaIndian RailwaysKavachtrain accident
Advertisement
Next Article