”கரூருக்கு ஏன் செல்லவில்லை..?" - தவெக தலைவர் விஜய் விளக்கம்..!
கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த பல பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பின் முதல் முறையாக தவெக தலைவர் விஜய் இன்று விடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் ”என் வாழ்க்கையில் இதுபோன்ற வலி மிகுந்த தருணத்தை நான் சந்தித்ததேயில்லை. என் மனது முழுவதும் வலி மட்டுமே உள்ளது. என்னுடைய சுற்றுப் பயணங்களின்போது, மக்கள் என்னைப் பார்க்க வருவதற்கு ஒரே காரணம் அன்பும் பாசமும்தான். அதற்கு நான் கடமைபட்டுள்ளேன். பதற்றமான சூழ்நிலைகளை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை. கரூர் கூட்ட நெரிசலால் சொந்தங்களை இழந்து தவிக்கும் அத்தனை குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் சந்திப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.