“ஏன்டி விட்டுப் போன... ஓ இதயம் கல்லா என்ன?” - வெளியானது ‘டிராகன்’ 3வது பாடல்!
ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக டிராகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் பிரதீப் உடன் அனுபமா பரமேஸ்வரன், விஜே சித்து, ஹர்ஷத், மிஷ்கின், வாசு தேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு நிக்கேத் பூமிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கல்லூரி கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் “ரைஸ் ஆப் தி டிராகன்” மற்றும் “வழித்துணையே” பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது டிராகன் படத்தின் 3வது பாடலான “ஏன்டி விட்டு போன?” பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது .