Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தியா கூட்டணியிலிருந்து விலகியது ஏன்..? - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் விளக்கம்...

02:06 PM Jan 31, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த நிதிஷ் குமார், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கைகோர்த்துள்ளார். நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து முதல் முறையாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் பாஜக தேர்தல் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது. இதேபோல் இந்த முறை பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிய எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி என பல கட்சிகள் ஒன்றிணைந்தது.

இதில், இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார். நாடு முழுக்க உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியை உருவாக்கிய முக்கிய நபர்களில் ஒருவராக நிதிஷ் குமார் இருந்தார். ஆனால், திடீர் திருப்பமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு "இந்தியா" கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கை கோர்த்தார்.இது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,  இந்தியா கூட்டணியில் இருந்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் விலகியதற்கு என்ன காரணம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "கூட்டணிக்கு வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன். ஆனால் அவர்கள் ஏற்கனவே அதை முடித்து விட்டார்கள். கூட்டணிக்காக நான் மிகவும் கடினமாக முயற்சித்தேன். ஆனால் அவர்கள் ஒன்று கூட செய்யவில்லை. எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை இன்று வரை முடிவு செய்யவில்லை.

இதனாலேயே நான் அவர்களை விட்டுவிட்டு முதலில் யாருடன் இருந்தேனோ அவர்களுடன் திரும்பி விட்டேன். நான் பீகார் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடந்தது என்பதை ராகுல் காந்தி மறந்துவிட்டாரா? 9 கட்சிகள் முன்னிலையில் நடத்தினேன். 2019-2020ல் சட்டசபை முதல் பொதுக்கூட்டம் வரை எல்லா இடங்களிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பற்றி பேசினேன் என தெரிவித்தார்." என செய்தியாளர் சந்திப்பில் நிதிஷ் குமார்  பேசியிருக்கிறார்.

Advertisement
Next Article