Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாஜக ஆட்சியில் #CreamBunக்கு ஏன் இவ்வளவு வரி என கேட்கக் கூட உரிமையில்லை - முதலமைச்சர் #MKStalin பேச்சு!

09:55 PM Sep 17, 2024 IST | Web Editor
Advertisement

பாஜக ஆட்சியில் க்ரீம் பன்னுக்கு ஏன் இவ்வளவு வரி என கேட்கக் கூட உரிமையில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

பேரறிஞர்’ அண்ணா பிறந்த விழா, திமுகவின் 75-வது ஆண்டு பவள விழா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என திமுகவின் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எ.சி.ஏ மைதானத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் திமுகவின் முப்பெரும் விழா விருதுகள், மூத்த தொண்டர்களுக்கான பணி முடிப்பு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருகில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அமர்ந்திருப்பதை போல் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் நாற்காலியில் அமர்ந்திருந்தபடி ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி வாழத்துரை வழங்கினார். என் உயிரிலும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என அதே கரகர குரலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்துரை வழங்கியதால் அரங்கமே அதிர்ந்தது.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது..

“ ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக காட்சியளிப்பது சாதாரணமான சாதனை அல்ல. இதற்கு நமது அமைப்பு முறைதான் காரணம் என்பதை, நான் நெஞ்சை நிமிர்த்து சொல்வேன். பெரியாருக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கியவர்கள் பெண்கள் தான். அந்த பெரியார் விருதை தற்போது ஒரு பெண் பெறுவது பெருமையாக உள்ளது. பெரியாரை சந்தித்ததால் தான் ஜெகத்ரட்சகன் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார் . அதனால்தான் இவ்வளவு பல்கலைக்கழகங்களை அவர் செயல்படுத்தி வருகிறார் என நினைக்கிறேன்.

உங்களைப் பார்த்தது எங்களுக்கு விருது கிடைத்தது போல் உள்ளது. விருது பெற்றவர்களின் உழைப்பாள் தான் கட்சி சிறப்பாக செயல்படுகிறது. கருணாநிதியின் வாழ்வே முடிந்துவிட்டாலும் கட்சி முடிவு பெறாது என்று கூறியவர் கருணாநிதி. உலகிலேயே தலைவன் தொண்டன் என்ற ஒரு அமைப்பு இல்லாமல் அண்ணன், தம்பி போன்ற ஒரு கட்டமைப்பு உள்ளது திமுகவில் தான். நூறாம் ஆண்டு கால விழா நடைபெறும் காலத்தில் கூட திராவிட அரசுதான் ஆட்சியில் இருக்கும். இன்னும் 100 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் திமுகவின் தேவை உள்ளது.

திமுக ஆட்சியில் இலவச பேருந்து, காலை உணவு திட்டம், நான் முதல்வன் போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழகத்தை வளமிக்க மாநிலமாக திமுக அரசு மாற்றியுள்ளது. இன்று க்ரீம் பன்னுக்கு என்ன வரி என்று கேட்கக்கூட உரிமை இல்லாத நிலை உள்ளது. ஒரு சரியான மத்திய அரசு அமையவில்லை. தமிழகத்திற்கு முறையான நிதி கொடுப்பதில்லை. நம்முடைய கோட்டை அங்கு இருந்தாலும், அதில் இருக்கக்கூடிய புல்லை கூட நம்மால் வெட்ட முடியவில்லை என்று கருணாநிதி கூறினார். முழுமையான நிதி கிடைத்தால் தமிழகத்தை ஒரு சிறந்த மாநிலமாக மாற்ற முடியும்.

இந்த தேர்தலை தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும். ஆணவத்தால் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். உங்கள் மேல் உள்ள நம்பிக்கையால் சொல்கிறேன். எந்த இயக்கமாக இருந்தாலும் அதற்கு கொள்கை தேவை, அதனை வழிநடத்த தலைமை தேவை. இதுபோன்று எந்த கட்சியும் வெற்றி பெறவில்லை என்று 2026-ல் நாம் வெற்றி பெற்ற பிறகு அதனை சொல்ல வேண்டும். அந்த வரலாறு எதிர்கொள்ள நீங்கள் தயாரா?

நமது எல்லாக் கனவுகளும் நிறைவேறிவிட்டதா எனக் கேட்டால்… இல்லை! மாநில உரிமைகளை வழங்கும் ஓர் ஒன்றிய அரசு அமையவில்லை! நிதி உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இன்னமும் நாம் போராட வேண்டிய நிலைதான் இருக்கிறது. இப்படிப்பட்ட ஏராளமான நெருக்கடிகளுக்கு இடையில்தான், தமிழ்நாட்டை எல்லா விதங்களிலும் முன்னேற்றும் ஒற்றை இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது.

பேரறிஞர் அண்ணாவும் – தலைவர் கலைஞரும் வலியுறுத்திய மாநில சுயாட்சிக் கொள்கை என்பது, நமது உயிர்நாடிக் கொள்கைகளில் ஒன்று! தலைவர் கலைஞர் எளிமையாகச் சொன்னார்…“நாம் கோட்டையில் இருந்தாலும் – அங்கே இருக்கும் புல்லை வெட்டக்கூட உரிமை இல்லை”என்று சொன்னார். இன்றைக்குக் க்ரீம் பன்னுக்கு ஏன் இவ்வளவு வரி போடுகிறீர்கள் எனக் கேட்கக் கூட உரிமை இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. இந்தச் சூழலில் மாநில சுயாட்சியை வென்றெடுப்பதற்கான ஒரு அறிவிப்பைத்தான் இந்த பவள விழா செய்தியாகச் சொல்ல விரும்புறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
CMOTamilNaduDMKMK Stalin
Advertisement
Next Article