Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள்? - டி20 வீரர்கள் தேர்வு குறித்து பத்ரிநாத் கேள்வி

10:37 AM May 01, 2024 IST | Web Editor
Advertisement

டி20 உலகக் கோப்பை விளையாட்டு வீரர்களின் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள 20 அணிகளும், 15 பேர் கொண்ட அணியை மே 1-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி அறிவுறுத்தியது.

இதனையடுத்து, இதில் பங்கேற்கும் ஒவ்வொரு நாடுகளும் போட்டிக்கான தங்கள் அணிகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

அதன்படி இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குரூப் Aல் உள்ள இந்திய அணி ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்து அணியுடன் தனது முதல் போட்டியை விளையாடுகிறது. ஜூன் 9 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனும், ஜூன் 12 ஆம் தேதி அமெரிக்கா, ஜூன் 15 ஆம் தேதி கனடா ஆகிய அணிகளுடனும் மோதுகிறது.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் :

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பந்த்( விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன்( விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா,(துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சகல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ரிசர்வ் வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹ்மத், ஆஷிஷ் கான் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வீரர்களின் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட்,  கே.எல்.ராகுல், மாயன்க் யாதவ், நட்ராஜன் உள்ளிட்ட சில முக்கிய வீரர்கள் இடம்பெறாதது  ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்திய வீரர்களின் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை என்கிற சர்ச்சை எழுந்துள்ளது.


இந்திய அணி தேர்வு குறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்வில் முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தெரிவித்ததாவது..

"மற்ற வீரர்களைவிட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அணியில் இடம்பெறுவதற்கு இரண்டு மடங்கு விளையாட வேண்டியது உள்ளது. இது ஏன் என்பது புரியவில்லை. நடராஜன் அணியில் இருந்திருக்க வேண்டும். இந்த சூழலை பலமுறை நான் எதிர்கொண்டுள்ளேன்.
இதனை யாரும் வெளிப்படுத்துவதில்லை என்பதால் நான் பேசுகிறேன்.

500 விக்கெட் வீழ்த்திய அஸ்வினை கேள்வி கேட்கிறார்கள். டெஸ்ட் வரலாற்றில் சிறந்த டாப் 5 தொடக்க வீரர்களில் முரளி விஜய் உள்ளார். அவர் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் கேள்வி கேட்கிறார்கள். இதுகுறித்து கேள்விகள் ஏன் எழவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
டி20 உலகக் கோப்பைBadrinathIndian SquadT20 World CupTamilnadu Players
Advertisement
Next Article