‘முகமது ஷமி’க்குப் பதில் யார் சேர்க்கப்பட்டாலும்... தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா!
இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து முகமது ஷமி விலகி இருந்தாலும், அவருக்கு பதில் யார் அணியில் சேர்க்கப்பட்டாலும் பேட்ஸ்மேன்களுக்கு அவர்கள் சவால் அளிப்பார்கள் என கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. இதில் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. தற்போது இன்று மதியம் இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்கியது.
இதனிடையே இந்த டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகினார். எனவே, காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ள முகமது ஷமிக்குப் பதிலாக யார் அணியில் சேர்க்கப்பட்டாலும் அவர்கள் தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிப்பார்கள் என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: “இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி ஒரு மிகச் சிறந்த வீரர். அவருக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டும் என எங்களில் பலர் நினைப்போம். முகமது ஷமி மட்டுமின்றி அவரது இடத்தில் எந்த ஒரு பந்துவீச்சாளர் இடம்பெற்றாலும் அவர்கள் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக பந்துவீசுவார்கள்” என தெரிவித்தார்.