Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்? | தென் ஆப்ரிக்கா – ஆஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரீட்சை...

09:05 AM Nov 16, 2023 IST | Web Editor
Advertisement

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தகுதி பெற தென் ஆப்ரிக்கா – ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன.

Advertisement

13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அதில், இந்தியா, தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றான அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைஒபெற்ற முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அணியை தேர்வு செய்யும் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (நவ. 16) நடைபெறுகிறது.இதில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

விளையாடி 9 ஆட்டங்களில் 7 வெற்றி 2 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்கா அணி, பலம் வாய்ததாக கருதப்படுகிறது. அதேநேரம் ஆஸ்திரேலிய அணியின் பலத்தை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. லீக் சுற்றில் தென் ஆப்பிரிக்காவை போல் அதே 7 வெற்றி 2 தோல்விகளை ஆஸ்திரேலிய அணி பெற்று உள்ளது.

முதல் 2 தோல்விகளுக்கு பின்னர் ஆஸ்திரேலியா லீக் ஆட்டத்தில் தோல்வியே காணாமல் அரைஇறுதிக்கு தகுதி பெற்று உள்ளது. இறுதிப் போட்டி வாய்ப்புக்காக இரு அணி வீரர்களும் மல்லுக் கட்டுவார்கள் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

 

 

 

Advertisement
Next Article