Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோத்ரா ரயில் எரிப்பு குற்றவாளி ரபீக் உசேன் பாதுக் என்ற பெயரில் வைரலாகும் படம் யாருடையது? - Fact Check

01:12 PM Dec 17, 2024 IST | Web Editor
Advertisement

This news Fact checked by Vishvas News

Advertisement

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ரஃபிக் உசேன் பாதுக் என்ற பெயரில் ஒரு ப்டம் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.

சமீபத்தில் வெளியான 'தி சபர்மதி ரிப்போர்ட்' திரைப்படம் வெளியான பிறகு, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ரபீக் ஹுசைன் பாதுக் தொடர்பான ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது 14 ஆண்டுகள் கழித்து இறுதியாக அவர் கைது செய்யப்பட்டார். இவர் கோத்ராவில் ரயிலுக்கு தீ வைக்க பெட்ரோல் நிலையத்திலிருந்து பெட்ரோல் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்று கண்டறிந்தது. வைரலான பதிவில் காணப்பட்ட படம் கோத்ரா கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபருடையது அல்ல என்றும் சிறப்பு அரசு வழக்கறிஞராக இருந்த ஆர்.சி.கோடேகரின் படம் என்றும் உறுதி செய்தது. அவரது படத்தை ரபீக் ஹுசைன் பாதுக் என செய்தி நிறுவனமான ஏஎன்ஐ ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பின்னர் அவர் தனது தவறை சரிசெய்து விளக்கம் அளித்து, இந்த புகைப்படம் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.சி.கோடேகரின் புகைப்படம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் பல பல பயனர்கள் இந்த ஸ்கிரீன்ஷாட்டை விஸ்வாஸ் நியூஸின் ஹெல்லைன் எண்ணான 91 9599299372 இல் பகிர்ந்து “*இது ரஃபிக் ஹுசைன் பாதுக். அவர் கோத்ராவில் ஒரு தலைவராக இருந்தார். இவர்தான் சபர்மதி ரயிலை எரிக்க பெட்ரோல் ஏற்பாடு செய்தார். அவர் 14 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளார். அவரது உறவினர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை பார்க்க விரும்பினார். ஒரு நாள் அவர் தனது மகனை அழைத்தார், என் பேரனின் முகத்தை பார்க்க வேண்டும் என்றும் நான் கோத்ராவுக்கு ரகசியமாக வருகிறேன் என்றும் தன் மகனிடம் சொன்னார்.

அப்போது அவரை டெல்லியில் கைது செய்வதை விட கோத்ராவுக்கு வர அனுமதிப்பது நல்லது என்று போலீஸ் நினைத்தது. கோத்ரா ஸ்டேஷனில் சாதாரண உடையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார், அவரது முழு தவறும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோத்ரா சம்பவம் தொடர்பாக எல்லாவற்றையும் ஒப்புக்கொண்ட அவர், பழைய டெல்லியின் லஜ்பத் ராய் மார்க்கெட்டில் 14 ஆண்டுகளாக வசித்ததாக காவல்துறையிடம் கூறினார். இவ்வளவு பெரிய முக்கியமான செய்தியை எந்த பத்திரிக்கைகளாவது காட்டியதா? ” என அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வெவ்வேறு சமூக ஊடக தளங்களில் உள்ள பல பயனர்கள் இந்த படத்தை ஒரே மாதிரியான சூழலில் பகிர்ந்துள்ளனர்

https://twitter.com/AlageshChelliah/status/1758459349595541535

உண்மை சரிபார்ப்பு :

வைரலான காணொலியில் இடம்பெற்றிருந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, ​​இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான பாஸ்கர்.காம் ரிப்போர்ட்டில் இந்தப் படத்தைக் கண்டோம். கோத்ரா ரயில் பெட்டிக்கு தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரஃபிக் ஹுசைன் பாதுக்கின் ஆயுள் தண்டனை தொடர்பான அறிக்கையில் இந்தப் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேடலின் போது, ​​ஜூலை 2, 2022 அன்று வெளியிடப்பட்ட செய்தி நிறுவனமான ANIயின் அதிகாரப்பூர்வ X இந்தப் படம் வெளியிடப்பட்டதைக் கண்டோம். படத்துடன் கொடுக்கப்பட்டுள்ள தகவலில், “கோத்ரா ரயில் எரிப்பில் குற்றம் சாட்டப்பட்ட ரபீக் ஹுசைன் பாதுக், 19 வருடங்களாக தலைமறைவாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது” என சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.சி.கோடேகர் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இதே ட்வீட்டில் விளக்கம் அளித்துள்ள ANI பிப்ரவரி 16, 2024 அன்று ஒரு தெளிவுபடுத்தல் வெளியிடப்பட்டது, "முந்தைய ட்வீட்டில் காணப்பட்டவர் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.சி. கோடேகர் ஆகும். அவர் குற்றவாளி ரஃபிக் பாதுக் அல்ல." எனவும் தெளிவுபடுத்தியிருந்தது. 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' அறிக்கையின்படி , கோத்ரா ரயில் படுகொலை, குல்பர்கா சொசைட்டி வழக்கு மற்றும் பிரிட்டிஷ் பேக்கரி கொலை உள்ளிட்ட பிற 2022 கலவர வழக்குகளில் ஆர்.சி.கோடேகர் அரசுத் தரப்பு வழக்கறிஞராக இருந்தார்.

இதேபோல Jagran.com இன் 16 பிப்ரவரி 2021 தேதியிட்ட அறிக்கையில் பாதுக் கைது செய்யப்பட்டதைக் குறிப்பிடுகிறது. அறிக்கையின்படி , “19 ஆண்டுகளுக்குப் பிறகு, குஜராத்தில் உள்ள கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிக்கு தீ வைத்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ரஃபிக் உசேன் பாதுக்கை கைது செய்வதில் வெற்றி கிடைத்துள்ளது. கோத்ரா நகரில் இருந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி 27, 2002 அன்று போகியை எரிக்க முழு சதித்திட்டத்தையும் தீட்டிய குழுவில் பாதுக் இருந்தார். இதில் 59 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர்.” என குறிப்பிடப்பட்டிருந்தது.

அறிக்கையின்படி, “கோத்ராவிலிருந்து தப்பிய பிறகு, அவர் தனது பெரும்பாலான நேரத்தை டெல்லியில் செலவிட்டார், அங்கு அவர் ரயில் நிலையங்கள் மற்றும் பல கட்டுமான தளங்களில் பணிபுரிந்தார். மேலும் வீடு வீடாக பொருட்களை விற்பனை செய்து வந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சலீம் இப்ராஹிம் என்கிற சலீம் பன்வாலா, ஷவுகத் சர்கா மற்றும் அப்துல் மஜீத் யூசுப் ஆகியோர் இன்னும் தலைமறைவாக உள்ளதாக அவர் தனது குடும்பத்தை கோத்ராவின் சுல்தான் ஃபலியா பகுதியில் உள்ள தனது பழைய வீட்டில் இருந்து வெளியேற்றினார் எனவும் கூறப்படுகிறது.

‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தி , பாதுக்கின் புகைப்படத்தைத் தாங்கி, “அவர் சதி செய்து கும்பலைத் தூண்டினார். ரயில் பெட்டிகளுக்கு தீ வைக்க பெட்ரோலையும் ஏற்பாடு செய்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி வைரலான படம் தொடர்பாக அவரது வழக்கறிஞரின் தம்பி ராசிக் கோடேகரை (வழக்கறிஞர்) தொடர்பு கொண்டோம். "படம் ஆர்.சி. கோடேகரின் படம்" என்று அவர் உறுதிப்படுத்தினார்.

முடிவு:

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ரஃபிக் உசேன் பாதுக் என்ற பெயரில் வைரலாகி வரும் படம் உண்மையில் கோத்ரா ரயில் சம்பவம், குல்பர்கா சொசைட்டி வழக்கு மற்றும் பிரிட்டிஷ் பேக்கரி எரிப்பு உள்ளிட்ட பிற 2002 கலவர வழக்குகளில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆர்.சி.கோடேகரின் படம் என்பது உறுதியாகிறது

Note : This story was originally published by Vishvas News and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Godhra RailGodhra Train CaseGujrathRafik Hussain bathukSabarmathi Express
Advertisement
Next Article