பழைய குற்றால அருவி யாருக்கு சொந்தம்? - வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை இருதரப்பும் உரிமை கோருவதால் சர்ச்சை!
11:39 AM Jul 07, 2024 IST
|
Web Editor
இந்த நிலையில், பழைய குற்றால அருவியில் பொதுப்பணித்துறையினர் சார்பில் சில தடுப்புகள் வைக்கப்பட்டு, அதில் பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமான பழைய குற்றால அருவி என்று அதில் அச்சிடப்பட்டுள்ளது. பழைய குற்றால அருவிக்கு வனத்துறையினர் உரிமை கோரி வரும் அதே வேளையில், பொதுப்பணித்துறை சார்பில் வைக்கப்பட்ட இந்த தடுப்புகளால் வனத்துறையினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisement
பழைய குற்றால அருவிக்கு வனத்துறையினர் உரிமைகோரி வரும் நிலையில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றால அருவி என வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisement
தென்காசி மாவட்டத்தில் உள்ள பழைய குற்றாலம் அருவியானது அடர் வனப் பகுதி எல்லைக்குள் உள்ளதால், அந்த அருவியை வனத்துறையினர் வசம் ஒப்படைக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு வனத்துறையினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து பழைய குற்றாலம் அருவி செல்லும் சாலையில் வனத்துறையினர் சார்பில் சோதனை சாவடிகள் அமைக்க தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் அனுமதி வழங்கினார். தொடர்ந்து, பழைய குற்றால அருவியை வனத்துறையினர் வசம் ஒப்படைப்பதற்கான பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
Next Article