Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
02:16 PM Dec 04, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று (03-12-2025) வடதமிழக – புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை 17.30 மணிஅளவில், வடதமிழக பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, இன்று (04-12-2025) காலை 08.30 மணி அளவில் மேலும் வலுவிழந்தது.

Advertisement

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, ராணிப்பேட்டை, கோயம்பத்தூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் கறைகள் பகுதிகளிலும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
HeavyRainRainRainAlertweatheralertWeatherForecastWeatherUpdate
Advertisement
Next Article