மதியம் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகிற 25-ந் தேதி ஒடிசா, மேற்கு வங்காள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனிடையே நள்ளிரவு முதல் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று மதியம் 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 19.5 செமீ மழை பதிவாகியுள்ளது . பள்ளிக்கரணை - 17.7 செமீ, மேடவாக்கம் -17 செமீ, பாரிமுனை -15.9 செமீ, மடிப்பாக்கம் - 15.7, ஈஞ்சம்பாக்கம் 14 செமீ மழை பதிவாகியுள்ளது.