இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
வட கிழக்குப் பருவமழை வருகிற 16-18 ஆகிய தேதிகளில் தொடங்க சாத்தியம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு, வடகிழக்கு திசை காற்று வீசக்கூடிய நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.
வடதமிழக கடலோரம், வடக்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் 2 வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இன்று தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.