Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இந்தியன் 2” இசைவெளியீட்டு விழா எங்கு, எப்போது? - படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

08:02 PM May 30, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் (ஜூன் 1) நடைபெறவுள்ள நிலையில், இந்நிகழ்ச்சி எங்கு எப்போது நடைபெறவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.  படத்தின் முதல் பாடலான ‘பாரா’ பாடல் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

 

படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக நாளுக்கு நாள் ஒரு அப்டேட் வெளியாகி கொண்டிருக்கிறது. இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘நீலோற்பலம்’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1-ம் தேதி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

Tags :
audio launchIndian 2Kamal haasanNews7Tamilnews7TamilUpdatesRajinikanthramcharanshankar
Advertisement
Next Article