'சக்தித் திருமகன்' படத்தின் டீசர் எப்போது? வெளியான அப்டேட்!
தமிழ் சினிமாவில் ‘சுக்ரன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. பின்னர் ‘நான்’ படத்தின் மூலம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் இவரது நடிப்பில் உருவான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
இதையும் படியுங்கள் : திடீரென உலகம் முழுவதும் முடங்கிய ‘எக்ஸ்’ தளம்!
இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், மற்றும் ஹிட்லர் போன்ற படங்கள் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றன. இதனையடுத்து, விஜய் ஆண்டனி தற்போது அருண் பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் விஜய் ஆண்டனியின் 25வது படமாக உருவாகிறது. இப்படத்திற்கு ’சக்தித் திருமகன்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படம் இந்தாண்டு கோடையில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், 'சக்தித் திருமகன்' படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இதன் டீசர் வரும் 12ம் தேதி மாலை 5.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.