'தக் லைஃப்' ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-3, மற்றும் கல்கி-2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப்.
கேங்ஸ்டர் பின்னணியில் எழுதப்பட்ட இக்கதையின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ரஷ்யா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது. நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. கடந்த ஜுன் 5ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
இப்படம் உலகளவில் ரூ. 95 கோடி வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வருகிற ஜூலை 4 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இப்படம் திரைக்கு வந்த 8 வாரங்கள் கழித்தே ஓடிடிக்கு வருவதுபோல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களால் திட்டமிட்ட தேதிக்கு முன்பே வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.