Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எப்போது? - வெளியானது முக்கிய அறிவிப்பு!

07:15 AM Nov 21, 2024 IST | Web Editor
Advertisement

நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் 2025 பிப்ரவரி 15ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு அந்த தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இருந்து வந்தது. இந்நிலையில், அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சிபிஎஸ்இ நிர்வாகம் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ‘How Is It Possible Bro?’ – வெளியானது ‘2K லவ் ஸ்டோரி’படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்குகிறது. சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுதேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025, பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 18-ம் தேதி வரை நடைபெறும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

Tags :
board exam 2024CBSECBSEexamsIndiaNews7Tamilnews7TamilUpdatesPublicExams
Advertisement
Next Article