Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வட இந்தியாவில் #Thangalan ரிலீஸ் எப்போது ? - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

06:51 PM Aug 24, 2024 IST | Web Editor
Advertisement

வட இந்தியாவில் தங்கலான் படம் எப்போது வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் விக்ரம். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்து இருக்கிறது. அந்த வகையில் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் தங்கலான்.

இந்த படத்தை பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் படம் மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார்.

மேலும், இந்த படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருமே தங்கலான் படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள். இப்படம் வெளியாகி 9 நாட்கள் ஆன நிலையில், உலகம் முழுவதும் ரூ. 65 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த நிலையில் 'தங்கலான்' திரைப்படம் வட இந்தியாவில் இந்தியில் வெளியாகாமல் இருந்தநிலையில், படக்குழு போஸ்டர் வெளியிட்டு இந்தியில் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி இந்த மாதம் 30-ம் தேதி 'தங்கலான் திரைப்படம் வட இந்தியாவில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags :
hindiNorth India ReleasePa. Ranjiththangalanvikram
Advertisement
Next Article