எப்போதுதான் பள்ளித் திறப்பு?... தமிழ்நாடு அரசு விளக்கம்!
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, மீண்டும் எப்போது பள்ளிகள் திறக்கும் என்பது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் குழப்பமாகவே இருக்கிறது. காரணம் தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை வரும் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் வெயிலால் ஜூன்.9ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என செய்தி பரவி வந்தது.
ஆனால் முன்கூட்டியே பருவமழை தொடங்கியதால், வெயிலின் தாக்கம் குறைந்தது. இதனையடுத்து ஜூன் இரண்டாம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
இந்நிலையில் மீண்டும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம். அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 9ஆம் தேதி திறப்பதாகப் பரப்பப்படுவது வதந்தி என்று தெரிவித்துள்ளது. இதனால் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதியாகியுள்ளது.