Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சிங்கம் இறங்குனா காட்டுக்கே விருந்து….” - கவனம் பெறும் #Leo மேக்கிங் வீடியோ!

05:59 PM Oct 19, 2024 IST | Web Editor
Advertisement

விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் ஓராண்டு நிறைவையொட்டி மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் லியோ. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருந்தது. அதேமாதிரி முதல்நாள் வசூலிலும் படம் சாதனை படைத்தது. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கௌதம் வாசுதேவ் ஆகியோர் நடித்திருந்தனர்.

லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது. இப்படம் வெளியாகி இன்றும் ஓராண்டு நிறைவடைந்துள்ளன. இதனைக் கொண்டாடும் விதமாக 7  நிமிடம் நீளமுள்ள லியோ படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கு தற்காலிகமாக தளபதி 69 என பெயரிடப்பட்டுள்ளது. கே.வி.என் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஜெக்டே , பிரியாமணி , கெளதம் மேனன் , பிரகாஷ் ராஜ் , மமிதா பைஜூ , பாபி தியோல் , நரேன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

Advertisement
Next Article