Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Vettaiyan ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

01:52 PM Oct 25, 2024 IST | Web Editor
Advertisement

வேட்டையன் திரைப்படம் நவ.7ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், ராணா, ஃபஹத் பாசில், அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு கடந்த அக்.10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

என்கவுன்ட்டர் குறித்து பேசியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. முன்னதாக இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த மனசிலாயோ, ஹண்டர் வன்ட்டார் ஆகிய பாடல்கள் வெளியாகி இன்றளவும் டிரெண்டிங்கில் உள்ளது. இப்படம் உலகளவில் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

சமீபத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து நடித்து படத்தில் இடம்பெறாத காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது. தொடர்ந்து, வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள சுரங்க நடைபாதை சண்டைக்காட்சியின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வேட்டையன் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த மாதம் 7-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Next Article