Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Thupparivalan2 படப்பிடிப்பு எப்போது? வெளியான தகவல்!

03:00 PM Oct 22, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் விஷாலின் துப்பறிவாளன் - 2 படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து, கடந்த 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பறிவாளன். துப்பறியும் கதைக்களத்தில் உருவான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, துப்பறிவாளன் 2 படத்தை விஷாலை வைத்து மிஷ்கின் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.

இந்த சூழலில், கடந்த 2019ம் ஆண்டு துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தபோது, மிஷ்கின் மற்றும் விஷால் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு, துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கி நடிக்க இருப்பதாக விஷால் அறிவித்தார்.

ஆனால், அதன்பின் வேறு படங்களில் விஷால் பிஸியாக நடித்து வந்தார். இந்த நிலையில், துப்பறிவாளன் 2 திரைக்கதையில் சில மாற்றங்களை விஷால் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகிற டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு லண்டன், மலேசியா, அஜர்பைஜன் போன்ற நகரங்களில் நடைபெற உள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
movienews7 tamiltamil cinemaThupparivaalanThupparivaalan 2vishal
Advertisement
Next Article