தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் எப்போது?
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்கான தேதியை இறுதி செய்யக்கூடிய நடவடிக்கைககளில் சட்டப்பேரவை செயலகம், முதலமைச்சர் அலுவலகம் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள் : “நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி” – பிப்.8ல் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்!
வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்தும், முக்கியமான திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாத இறுதி அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது. இந்தாண்டின் முதல் தமிழநாடு சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஜன.6-ம் தேதி கூடியது. அப்போது கூட்டத்தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என குற்றம் சாட்டி ஆளுநர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.