‘எமகாதகி’ படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!
பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி’. இப்படத்தில் ரூபா கொடுவயூர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் உமா மஹேஷ்வர உக்ரா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர். ‘எமகாதகி’ படத்தில் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜெசின் ஜார்ஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இயற்கைக்கு அப்பாற்பட்டு நடக்கும் அமானுஷ்யமான விஷயத்தையும் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
உயிர்போன பின்பும் வீட்டை விட்டு வெளியேற மறுக்கிற பெண்ணின் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வரும் மார்ச் 7ம் தேதி வெளியாகவுள்ளது.