‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!
‘பவர் பாண்டி’, ‘ராயன்’ படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இத்திரைப்படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கோல்டன் ஸ்பாரோ' பாடல் வெளியாக டிரெண்ட் ஆனது. இதற்கிடையே, கடந்த மாதம் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி இப்படம் வருகிற 21-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதனையடுத்து, தனுஷ் ‘இட்லி கடை’ எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது-