Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'கருடன்' படத்தின் ஓடிடி ரீலீஸ் எப்போது? - வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

01:55 PM Jun 23, 2024 IST | Web Editor
Advertisement

'கருடன்'  திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.  

Advertisement

எதிர் நீச்சல்', 'காக்கிச் சட்டை', 'கொடி', 'பட்டாசு' படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள படம் 'கருடன்'. இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் சூரியின் நடிப்பு பாராட்டப்பட்டது. இதுவரை உலகளவில் ரூ.42 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கருடன் திரைப்படம் ரூ.50 கோடி வசூலை நெருங்கியுள்ளது.

தற்போது திரையரங்குகளில் உள்ள கருடன், விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அடுத்த மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
GarudanRS Durai Senthil kumarsasikumarSooriUnni MukundanvetrimaaranYuvan shankar raja
Advertisement
Next Article