Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘வாழை’ திரைப்படத்தின் 3வது பாடல் எப்போது? வெளியான அப்டேட்!

12:24 PM Aug 04, 2024 IST | Web Editor
Advertisement

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாழை’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘ஒத்த சட்டி சோறு’ பாடல் நாளை மாலை வெளியாக உள்ளது. 

Advertisement

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாழை’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், ஜே.சதிஷ் குமார், திவ்யா துரைசாமி, ஜானகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ், ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது.

ரெட் ஜெயண்ட் மூவீஸ் இப்படத்தை விநியோகம் செய்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், மூன்றாவது பாடலான ‘ஒத்த சட்டி சோறு’ பாடல் நாளை (ஆக. 5) மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
3rd Singlemari selvarajmovie updateOtha Satti SoruSanthose NarayananVaazhai
Advertisement
Next Article