Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராயன் திரைப்படத்தின் 2-ஆவது பாடல் எப்போது ரிலீஸ்? வெளியானது அப்டேட்!

07:25 PM May 22, 2024 IST | Web Editor
Advertisement

ராயன் திரைப்படத்தின் 2வது பாடல் வரும் 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Advertisement

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘கேப்டன் மில்லர்’  திரைப்படம் மக்களிடையே கலவையான வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தனுஷின் 50-வது படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன்,  சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், புத்தாண்டை முன்னிட்டு வெளியான புதிய போஸ்டர் ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றன.  தொடர்ந்து, படத்தின் முதல் பாடலான ‘அடங்காத அசுரன்’  பாடல் வெளியாகி தனுஷின் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.  இந்த திரைப்படம் வரும் ஜூன் 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், இத்திரைப்படத்தின் 2வது பாடல் வரும் 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Aparna Balamuraliar rahmand50DhanushDushara VijayanRaayan
Advertisement
Next Article