#Vidaamuyarchi படத்தின் 2வது சிங்கிள் எப்போது?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'துணிவு' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அஜித் உடன் திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, ஆரவ், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் டீசர், பர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு சென்சார் குழு யூஏ சான்றிதழ் வழங்கியது. இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி 30 நிமிடங்களை இருப்பதாக இணையத்தில் புகைப்படங்கள் வைரலானது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை காலை 10.45 மணிக்கு வெளியாகிறது. விடாமுயற்சி திரைப்படம் பிப்.6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.