Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'டிமான்டி காலனி 2' ரிலீஸ் எப்போது? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

12:00 PM Jul 24, 2024 IST | Web Editor
Advertisement

'டிமான்டி காலனி 2' திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

நடிகர் அருள்நிதி, இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் வெளியான “டிமான்டி காலனி” திரைப்படம் ரசிகர்களை உறைய வைக்கும் திகில் படமாக  இருந்தது. நடிகர் அருள்நிதி, தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் வித்தியாசமான பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடன் செயல்பட்டு, திரையுலகில் ஒரு பெரிய நிலையை அடைந்துள்ளார்.

டிமான்டி காலனி மூலம் அறிமுகமான திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து, இமைக்கா நொடிகள் மற்றும் விரைவில் வரவிருக்கும் ‘கோப்ரா’ போன்ற பெரிய படங்களை இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த படத்தின் 2ம் பாகம் உருவாகும் என இப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்திருந்தார்.  அதன்படி, தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'டிமான்டி காலனி 2' உருவாகியுள்ளது.

இத்திரைப்படத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் முத்துக்குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஸ் இசையமைத்துள்ளார்.  இந்த நிலையில், 'டிமான்டி காலனி 2' திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Ajay GnanamuthuArulnithiDemonte ColonyDemonte Colony2Demonte Colony2 From August15Demonte Colony2 Release Datemovie updatepriya bhavani shankarrelease date
Advertisement
Next Article