Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நள்ளிரவில் முடங்கிய WhatsApp, Facebook, Instagram - கடுப்பான நெட்டிசன்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

08:39 AM Dec 12, 2024 IST | Web Editor
Advertisement

நள்ளிரவு முதல் அதிகாலை வரை மெட்டா நிறுவனத்தில் சமூக ஊடக தளங்கள் முடங்கியதால் பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Advertisement

தற்போது Artificial Intelligence எனும் செயற்கை நுண்ணறிவு காலத்தில் வாழ்ந்து வருகிறோம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சமூக வலைதளங்களுடன் தொடர்பு இல்லாமல் ஒரு நாளின் தொடக்கமும் இல்லை இரவு முடிவதும் இல்லை. அந்த வகையில் பிரபலமாக அறியப்படும் சமூக வலைதளங்களாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் உள்ளிட்ட செயலிகள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இந்த மூன்று தளங்களும் மெட்டா எனும் நிறுவனத்திற்கு கீழே இயங்குகின்றன. இதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் ஆவார். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் உலகெங்கும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரு சமூக வலைதளங்களும் முடங்கின.

சமூக வலைதளங்கள் திடீரென முடங்கியதால் அவற்றை பயன்படுத்தும் பயனாளர்கள் கருத்துப் பரிமாற்றம் மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகியதாக எக்ஸ் தளங்களில் பதிவிட்டனர். இதேபோல இரவு 11 மணி முதல் வாட்ஸ்-அப் செயலியின் மூலம் குறந்தகவல்கள் எதுவும் பகிர முடியவில்லை எனவும் என எக்ஸ் தளத்தில் பயனாளர்கள் புகாரளித்தனர்.

இதனைக் குறிப்பிட்டு #MetaDown, #WhatsappDown ஆகிய ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி பயனர்கள் பலர் மெட்டா நிறுவனத்தை டேக் செய்து புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து மேற்சொன்ன இரண்டு ஹேஷ்டேக்குகளும் டிரெண்டிங்கில் இடம்பிடித்தது.

இதனைத் தொடர்ந்து மெட்டா நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தது. அதில் தெரிவித்துள்ளதாவது..

“தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக மெட்டா செயலிகளின் பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக செயல்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வர நாங்கள் பணியாற்றி வருகிறோம்,ஏதேனும் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து அதிகாலை 4மணி அளவில் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட மெட்ட நிறுவனம் 99% பிரச்னைகளை சரிசெய்துவிட்டதாகவும், சிலவற்றை சரிசெய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தது. மேலும் பயனர்கள் தொடர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் செயலிகளை பயன்படுத்துமாறும் சிரமத்திற்கு மன்னிக்குமாறும் கேட்டுக் கொண்டனர். இதே போல கடந்த மார்ச் மாதம் இந்தியா உட்பட உலக அளவில் மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள் சேவை முடங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags :
FacebookinstagramMetawhatsapp
Advertisement
Next Article