Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திமுக சட்டத்துறை மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
07:27 PM Jan 18, 2025 IST | Web Editor
Advertisement

திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு சென்னை ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ளே செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஒரு நாடு, ஒரு தேர்தல், ஆளுநர் ரவி விவகாரம் ஆகியவற்றை சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன.

Advertisement

இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்த நிலையில், இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

திமுக சட்டத்துறை மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

  1. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு இரங்கல் தீர்மானம்.
  2. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை திட்டம் நிறைவேறினால் அதனை எதிர்த்து வழக்கு தொடுக்கவும் இந்த மாநாட்டில் தீர்மானம்.
  3. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தீர்மானம். தமிழ்நாடு மக்களிடம் ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தியும்  தீர்மானம்.
  4. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான சட்ட திருத்தத்தை கொண்டுவந்த முதலமைச்சருக்கு நன்றி. அரசியல் செய்வதாக எண்ணி பொய் பிரச்சாரம் செய்து தமிழ்நாடு மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கன்னடனம்.
  5. மத்திய அரசு கருத்துகளை கேட்காமல் தன்னிச்சையாக கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு கண்டனம்.
Advertisement
Next Article