Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தருவோம் என்று சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது?” - சிபிஐ(எம்) மாநில செயலாளர் சண்முகம் கேள்வி!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தருவோம் என்று சொல்வதற்கு மத்திய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
07:27 PM Feb 25, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் கடலூர் சூரப்பநாயக்கன்
சாவடியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த மாநில குழு கூட்டத்தில், கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவித்து, சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

Advertisement

வெள்ளக்கரை ஊராட்சிக்கு உள்ளிட்ட மலையடிக்குப்பம்,பெத்தான் குப்பம்,கொடுக்கன்பாளையம் ஆகிய கிராமங்களில் 5 தலைமுறைகளாக வாழ்ந்து வரும் விவசாயிகளை சட்டவிரோதமாக மிரட்டி, நிலங்களை விட்டு வெளியேற்ற நினைக்கும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளை தடுத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான சண்முகம்,

“கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தருவோம் என்று சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது?. அரசியல் சாசனம் சொல்வது
படி அவரவர்கள் எல்லைக்குள் நடந்து கொண்டால் நல்லது. மீறி நடந்து கொண்டால் மோதல் போராட்டம் நடக்கும்” என தெரிவித்தார்.

மேலும் கடலூரில் அரசு கையகப்படுத்தும் நிலத்தில் தோல் தொழிற்சாலை கொண்டு வந்தால் அதை முற்றிலுமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கும் என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Tags :
CPI(M)fundsNational Education PolicyShanmugamState Secretary
Advertisement
Next Article