ஏடிஹெச்டி பிரச்னை என்றால் என்ன? இது சரி செய்யக்கூடியதா?
ஏடிஹெச்டி பிரச்சனை சரிசெய்யக்கூடியதா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்? பார்க்கலாம்.
குழந்தைகளிடமோ அல்லது பெரியவர்களிடமோ ஏடிஹெச்டி பிரச்சனை இருந்தால் சரிசெய்ய முடியாது. தொடர் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் தெரபி மூலம் பிரச்சனை வீரியமாகாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஏடிஹெச்டி என்பது குறிப்பாக மூளையின் கட்டுப்பாடோடு தொடர்புடைய பிரச்னை. இதை டெவெலப்மென்டல் கண்டிஷன் (Developmental Condition) என்போம். பொதுவாகவே பிறந்ததிலிருந்தே இந்தப் பிரச்னை இருக்கும். AD என்பது கவனக்குறைவு (Attention Deficit); HD என்பது ஹைப்பர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Hyperactivity disorder).
ஏடிஹெச்டி பாதிப்புள்ளவர்களுக்குக் கவனக் குறைவு இருக்கும். இவர்கள் எளிதாக டிஸ்ட்ராக்ட் ஆவதோடு, துறுதுறுவென இருப்பார்கள். இவர்களுக்கு ஹைப்பர் ஆக்டிவிட்டி அதிகமாக இருக்கும். இந்த பாதிப்பு பொதுவாக குழந்தைகளுக்கு இருக்கும். ஆனால், பெரியவர்களையும் பாதிக்கலாம்.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மென்டல் ஹெல்த் வரையறையின் படி, 'ஏடிஹெச்டி என்பது, கவனக்குறைவு, ஹெபர் ஆக்டிவ் பிரச்சனையால் ஒரு மனிதரின் வளர்ச்சியில் தடை ஏற்படும்' என்று தெரிவிக்கிறது.
இந்தியாவில் இந்த பிரச்சனை பற்றி சரியான புரிதல் இல்லாததால், ஏடிஹெச்டியால் பாதிக்கப்பட்டவர்களை சோம்பேறிகள், நேர்மையற்றவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.