56 ஆண்டுகளாக மூதாட்டியின் வயிற்றில் இருந்த ‘இறந்த’ குழந்தை... நடந்தது என்ன..?
பிரேசில் நாட்டில் 81 வயதான மூதாட்டியின் வயிற்றில் சுமார் 56 ஆண்டுகளாக இருந்த இறந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் நீக்கினர். சிகிச்சைக்கு பின்னர் உடலில் ஏற்பட்ட தொற்று காரணாமாக அவர் உயிரிழந்துள்ளார்.
பிரேசிலில் டேனிலா வேரா என்ற 81 வயதாகும் இவருக்கு அடி வயிற்றில் அதிகபடியான வலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இவரின் வயிற்றில் பகுதியை 3டி ஸ்கேன் எடுத்து பார்த்தலில், அடி வயிற்று பகுதியில் இறந்த குழந்தை இருந்தது தெரியவந்துள்ளது.
மருத்துவ முறையில் இந்த கருவை ஸ்டோன் பேபி (Stone baby) என்று குறிப்பிடப்படுகிறது. பொதுவாக கரு என்பது பெண்னின் கருப்பையில் உருவாகும். ஆனால் இவருக்கு அப்படியில்லாமல் கருப்பைக்கு வெளியே உண்டாகியுள்ளது. இந்த நிலை, இடம் மாறிய கர்ப்பம் (ectopic pregnancy) என குறிப்பிடப்படுகிறது. இளம் பருவத்தில் முதன்முறை கருவுற்றப்போது இந்த இடம் மாறிய கர்ப்பம் ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. கருப்பையை விட்டு வெளியில் வளரும் கரு, போதிய வளர்ச்சியின்றி இறந்துவிடும். இறந்த கரு சில நாட்களில் ஸ்டோன் பேபி ஆக மாறிவிடும்.
அதனைத்தொடர்ந்து மற்றொரு மருத்துவமனையில் அவருக்கு 3டி ஸ்கேன் எடுத்துபார்த்தலில் வயிற்றில் ஸ்டோன் பேபி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த ஸ்டோன் பேபி நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக டேனிலா உயிரிழந்தார்.
வேராவின் மகள் ரோஸ்லி அல்மீடியா, “நாங்கள் பழங்குடியினர். மருத்துவரிடம் செல்வது என் தாய்க்கு பிடிக்கவில்லை. மருத்துவத்திற்கான உபகரணங்களைக் கண்டு பயந்தார். தனக்குள் ஒரு குழந்தை நகர்வது போல் தெரிகிறது என்று அவர் கூறினார். சில நேரங்களில் அவர் வயிறு மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால் நாங்கள் ஒருபோதும் இப்படி இருக்கும் என சந்தேகிக்கவில்லை" இவ்வாறு தெரிவித்தார்.