என்ன.. ஒரு நாளுக்கு 25 மணி நேரமா..? இன்னும் என்னென்ன ஆக போகுதோ..? - ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
பூமியில் இருந்து நிலவு விலகிச் செல்வதாகவும், எனவே ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் என்பதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
நிலவு குறித்த சமீபத்திய ஆய்வு அனைவருக்கும் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. பூமியின் ஒரே ஒரு இயற்கையான துணைக்கோளான நிலா பூமியை விட்டு மெதுவாக நகர்ந்து செல்வது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆய்வாளர் குழு இந்த ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில் பூமியிலிருந்து சந்திரன் படிப்படியாகப் பிரிந்து செல்வது தெரிய வந்துள்ளது.
இதனால் பூமியிலும் பல வித மாற்றங்கள் நடக்கும் எனவும், இந்த ஆய்வில் பூமியிலிருந்து நிலா ஆண்டுக்கு சுமார் 3.8 செமீ வீதம் பிரிந்து செல்வதாகவும், இதனால் பூமியில் பகலின் நேரத்தை அதிகரிக்கும் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. பூமியில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கும் நிலையில், நிலவு பிரிந்து செல்வதால் அது 25 மணி நேரமாக அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்த மாற்றம் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு பிறகே மாறும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.