மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை! - எலிவால் அருவியில் வெள்ளப்பெருக்கு!
மேற்கு தொடர்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் எலிவால் அருவியல் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்சி மலை பகுதியில் கடந்த இரண்டு
மாதங்களாக போதிய மழை பெய்யாததால் மஞ்சளாறு அணைக்கு மேல் பகுதியில் உள்ள எலிவால் அருவியில் முற்றிலும் நீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இதனால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இதையும் படியுங்கள்:குழந்தைகளுடன் மேஜிக் செய்து விளையாடிய பிரதமர் நரேந்திர மோடி – வைரலாகும் பதிவு!
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு
தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள்மலை, சாமக்காடு, பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அருவியில் நீர் வரத்து துவங்கி
ஆர்பரித்து கொட்டுகின்றது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அருவிகளில் மிகவும் உயராமானது எலிவால் அருவி. கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் முதன் முதலில் வரவேற்கும் விதமாக அமைந்துள்ள எலிவால் அருவி அமைந்து உள்ளது. இந்த நிலையில், நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதை கொடக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர்.