ஆஸ்திரேலிய அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்!
டி20 உலகக் கோப்பையின் பயிற்சி ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
டி20 உலகக் கோப்பை நாளை முதல் 29-ம் தேதி வரையில் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா உட்பட 20 அணிகள் பங்கேற்கிறது. இதில் மொத்தம் 55 போட்டிகள் நடைபெறவுள்ளது. குரூப் சுற்று, சூப்பர் 8 சுற்று, நாக் அவுட் என போட்டிகள் நடைபெற உள்ளது. இந்திய அணி ‘குரூப்-ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான் அணியும் அங்கம் வகிக்கிறது.
இந்நிலையில், தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணி மோதியது. இந்திய நேரப்படி அதிகாலை இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 4விக்கெட்டுகள் இழந்து 257 ரன்கள் எடுத்தது. இதில் நிகோலஸ் பூரன் 75 ரன்கள், ரோமன் பவல் 52 ரன்கள், ரூதர்போர்டு 47 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதையும் படியுங்கள் : மக்களே.. பான்-ஆதார் இணைக்க இன்றே கடைசி நாள் - மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க..!
இதையடுத்து, களமிறங்கிய 9 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது. இதில் ஜோஷ் இங்கிலீஷ் 55 ரன்கள், நாதன் எல்லிஸ் 39 ரன்கள், டிம் டேவிட் 25 ரன்கள், ஆடம் ஜாம்பா 21 ரன்களும் எடுத்தனர். அதன்படி, 35 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்ற பெற்றது.