Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வாரணாசியில் கோயிலுக்கு சென்ற பட்டியலின இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டனரா? - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

வாரணாசியில் உள்ள மகாதேவ் கோயிலுக்குச் சென்ற பட்டியலின மக்கள் உயர் சாதியினரால் ஆடைகளை களைந்து தாக்கப்பட்டதாகக் கூறும் ஒரு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
04:17 PM Feb 25, 2025 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘AajTak

Advertisement

வாரணாசியில் உள்ள மகாதேவ் கோயிலுக்குச் சென்ற பட்டியலின மக்கள் உயர் சாதியினரால் ஆடைகளை களைந்து தாக்கப்பட்டதாகக் கூறும் ஒரு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், இருட்டில் ஒரு ஆற்றங்கரைக்கு அருகில் சில  இளைஞர்கள் நிர்வாணம்ாக ஆடைகளின்றி காணப்படுகிறார்கள். சிலர் அவர்களை தடிகளால் அடித்து துன்புறுத்துகின்றனர்.

இந்த வீடியோ காசியில் எடுக்கப்பட்டது என பலர் பகிர்ந்துள்ளனர். இந்த சம்பவத்தை உண்மை என்று கருதி, மக்கள் பலர் உபி அரசையும்  காவல்துறையையும் விமர்சித்து, எக்ஸ் தளத்தில் உ.பி. காவல்துறையை டேக் செய்து பதிவுகளை பதிவிட்டு  வருகின்றனர்.

ஆஜ்தக்கின் விசாரணையில் இந்த வீடியோ செப்டம்பர் 2024 இல் மத்தியப் பிரதேசத்தின் மகேஷ்வரில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரியவந்துள்ளது. அங்குள்ள நர்மதா நதியில் சிலர் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்ததால், உள்ளூர் மக்களால் அவர்கள் தாக்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

உண்மை சரிபார்ப்பு : 

இந்த வீடியோயைப் பற்றி நாங்கள் தேடிய போது, கடந்த ஆண்டு அக்டோபரில் இதே போன்ற கூற்றுடன் வீடியோ பகிரப்பட்டது என்பதைக் கண்டறிந்தோம். அந்த நேரத்தில், உ.பி. போலீசார் அதை மறுத்து, இந்த வீடியோ மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் உள்ள மகேஷ்வரில் இருந்து எடுக்கப்பட்டது என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தனர். தவறான தகவல்களைப் பரப்பிய பயனர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் காவல்துறை கருத்து தெரிவித்திருந்தது.

இதனுடன், காவல்துறை தனது ட்வீட்டில் டைனிக் பாஸ்கரின் செய்தியின் இணைப்பையும் பகிர்ந்து கொண்டது. செப்டம்பர் 12, 2024 தேதியிட்ட இந்தச் செய்தியில், மகேஷ்வரில் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள அஹில்யா காட் என்ற இடத்தில் உள்ள ஆற்றில் சில இளைஞர்கள் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவல், படித்துறையில் சுற்றித் திரிந்த ஒரு குழுவினருக்குக் கிடைத்தது. இதன் பிறகு, இந்தக் குழு அந்த பகுதியை அடைந்து, நர்மதா நதியில் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களை வெளியே இழுத்து அடிக்கத் தொடங்கியது. காவல்துறையினர் வருவதற்கு முன்பு இந்த இளைஞர்கள் உள்ளூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

இது தவிர. தமனோத் சமாச்சார் என்ற உள்ளூர் யூடியூப் சேனலில் இருந்து ஒரு வீடியோ அறிக்கையையும் நாங்கள் கண்டோம். வைரலான வீடியோயை இதில் காணலாம். இதிலும் இந்த சம்பவம் மகேஸ்வரருடையது என்று கூறப்படுகிறது. இந்த இளைஞர்கள் உயர் சாதியினரால் தாக்கப்பட்டதாக எந்தச் செய்தியிலும் எழுதப்படவில்லை.

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சம்பவத்தின் வீடியோவை சாதியக் கோணத்தைக் கொடுத்து, அது உ.பி.யைச் சேர்ந்தது எனக குழப்பம் ஏற்படுத்த இந்த வீடியோ பரப்பப்பட்டுள்ளது என்பது இங்கே தெளிவாகிறது

Note : This story was originally published by ‘AajTak’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
தவறானபகிர்வுவீடியோBeatenDalith YouthNudeVaranasi
Advertisement
Next Article