Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் இறுதி வரை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

நெல்லை - பெங்களூர் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் மாதம் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
03:24 PM Aug 31, 2025 IST | Web Editor
நெல்லை - பெங்களூர் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் மாதம் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Advertisement

நெல்லையில் இருந்து தென்காசி வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூர் சிவமொக்கா ரயில் நிலையத்திற்கு தற்போது சிறப்பு ரயிலானது வாரந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறப்பு ரயிலை அக்டோபர் மாதம் இறுதி வரை நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

அதன்படி, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.40 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது திங்கட்கிழமை மதியம் 1 மணிக்கு பெங்களூர் சிவமொக்கா ரயில் நிலையத்தை சென்றடையும்.

அதேபோல், பெங்களூர் சிவமொக்கா ரயில் நிலையத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மதியம் 2.20 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது, மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 10:45 மணிக்கு நெல்லையை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
BengaluruExtensionNellaiOctobersouthern railwayspecial trainTenkasi
Advertisement
Next Article