விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றாலத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு சென்று புனித நீராடி விட்டு செல்வது வழக்கம். இதன் காரணமாகவே தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படும் .
இந்த நிலையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகையால் கூட்டம் களைகட்டிய நிலையில் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். மேலும் தேரடி வீதி, குற்றாலநாதர் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .