#Weatherupdate | தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் இன்று நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : #ChennaiAirShow | “அனைத்து வசதிகளும் அரசால் செய்து தரப்பட்டன” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
அந்த வகையில், தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக,நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பத்தூர், கரூர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.