Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Weatherupdate  - மக்களே உஷார்..! அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுக்க போகுது மழை!

01:03 PM Sep 30, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Advertisement

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

லேசான முதல் மிதமான மழை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Meteorological Departmenttamil naduTn Rains
Advertisement
Next Article